கொரோனா பிடியில் ஸ்பெயின் – அந்நாட்டு பிரதமர் அதிர்ச்சி தகவல்

 

கொரோனா பிடியில் ஸ்பெயின் – அந்நாட்டு பிரதமர் அதிர்ச்சி தகவல்

கொரோனாவின் அச்சுருத்தலில் உலக நாடுகள் அனைத்துமே தவித்து வருகின்றன. சில நாடுகளின் நிலைமை ரொம்பவும் கொடுமையானதாக இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 24 லட்சத்து  97 ஆயிரத்து 379 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 14 லட்சத்து 29 ஆயிரத்து 838 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 49 ஆயிரத்து 367 பேர்.  

கொரோனா பிடியில் ஸ்பெயின் – அந்நாட்டு பிரதமர் அதிர்ச்சி தகவல்

ஸ்பெயினில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவின் மொத்த பாதிப்பு 11 லட்சத்துக்கு 10 ஆயிரத்து 372. இவர்களில் 34,752 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.  குணமடைந்தவர்களின் விவரங்கள் இல்லை.

ஸ்பெயினில், இந்த ஆண்டு பிப்ரவரி முதலே கொரோனா பாதிப்பு தொடங்கி விட்டது. மார்ச் 20-ம் தேதி 10,856 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.. அதன்பின், மெல்ல புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. மே, ஜூன், ஜூலை மாதங்களில் ஓரளவு கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று ஆகஸ்ட்டில் மீண்டும் இரண்டாம் அலையாய் அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 18 ஆம் தேதியன்று மட்டும் 14,177 பேருக்கு தொற்று உறுதியானது. அடுத்தும் கூடுவதும் குறைவதுமாக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை அக்டோபர் 22 –ம் தேதி 20,986 பேருக்கும் நேற்று 19,851 பேருக்கும் உறுதியானது.

கொரோனா பிடியில் ஸ்பெயின் – அந்நாட்டு பிரதமர் அதிர்ச்சி தகவல்

ஸ்பெயினில் மரணிப்போர் எண்ணிக்கை ஏப்ரல் 2-ம் தேதி 961 ஆக இருந்தது. பிறகு படிப்படியாக குறைந்தது. மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கட்டுக்குள் இருந்தது. தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ் சொல்லும் தகவல் இன்னும் அதிர்ச்சி அளிக்கிறது. ஆம், தற்போது 11 லட்சம் எனக் குறிப்பிடும் கொரோனா தொற்று எண்ணிக்கை  சரியாகக் கணக்கிட்டால் 30 லட்சம் பேரைக் கடந்திருக்கும் என்றும் வரும் மாதங்களில் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.