கோவையில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா தொற்று… வீதிக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

 

கோவையில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா தொற்று… வீதிக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

கோவை

கோவை நஞ்சுண்டபுரம் பகுதியில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த வீதியை தடுப்புகளை கொண்டு அதிகாரிகள் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ள சூழலில், மாநில அளவில் தொற்று பாதிப்பிலும், உயிரிழப்பிலும் முதலிடத்தில் நீடித்து வருகிறது. நேற்று மட்டும் மாவட்டத்தில் புதிதாக 2,439 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், 44 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி பகுதிகளில் வைரஸ் தொற்றின் பரவல் கணிசமாக குறைந்து வந்தாலும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து வீதி வீதியாக சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா தொற்று… வீதிக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

அதன்படி, நேற்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட நஞ்சுண்டபுரம் பகுதியில் உள்ள மேற்கு புதூர் பகுதியில் வசிப்பவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 658 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 50 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு புதூரில் 50 பேருக்கு தொற்று உறுதியான வீதிக்கு அதிகாரிகள் சீல் வைத்து அடைத்தனர். மேலும், அந்த வீதி முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.