85 நாட்களுக்குப் பிறகு 6 லட்சத்துக்கும் கீழ் – இந்தியாவில் கொரோனா

85 நாட்களுக்குப் பிறகு 6 லட்சத்துக்கும் கீழ் – இந்தியாவில் கொரோனா

கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தினசரி புதிய கொரோனா நோயாளிகள் அதிகரிப்பது தற்போதுதா சற்று தணிந்து வருகிறது.

இந்தியாவில்  கடந்த 85 நாட்களில் முதல்  முறையாக தற்போதைய கோவிட்  பாதிப்புகளின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழ் வந்துள்ளது.

85 நாட்களுக்குப் பிறகு 6 லட்சத்துக்கும் கீழ் – இந்தியாவில் கொரோனா

நாட்டின் தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 5,94,386 ஆகும்.  கடைசியாக ஆகஸ்ட் 6 அன்று அப்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 5.95 லட்சமாக இருந்தது.

இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள மொத்த பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது தற்போதைய பாதிப்புகளின் அளவு வெறும் 7.35 சதவீதம் ஆகும்.

85 நாட்களுக்குப் பிறகு 6 லட்சத்துக்கும் கீழ் – இந்தியாவில் கொரோனா

அதிக அளவிலான கொவிட் நோயாளிகள் தினமும் குணமடைந்து வருகின்றனர். இதுவரை 73,73,375 நோயாளிகள் குணமாகி உள்ள நிலையில், உலகிலேயே  அதிக  அளவில் குணமடைந்தோரின் எண்ணிக்கையில் இந்தியா  முதன்மையான இடத்தில் உள்ளது.

இறப்பு விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.

85 நாட்களுக்குப் பிறகு 6 லட்சத்துக்கும் கீழ் – இந்தியாவில் கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,386 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 48,648 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தேசிய குணமடைதல் விகிதம் 91.15 சதவீதம் ஆகும்.

குணமடைந்தோரில் 80 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்திய அளவில் தினசரி குணமடையும் மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் கேரளாவும் இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிராவும் உள்ளன.

85 நாட்களுக்குப் பிறகு 6 லட்சத்துக்கும் கீழ் – இந்தியாவில் கொரோனா

புதிய நோயாளிகள் தினசரி அதிகரிக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு ஏழாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் கேரளாவும் இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிராவும் உள்ளன.

தினசரி இறப்பு எண்ணிக்கையில் மாநிலங்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மகாராஷ்டிராவும் இரண்டாம் இடத்தில் மேற்கு வங்கமும் உள்ளன.