ஞாயிற்றுக் கிழமைகளிலும் 2000 ரூபாய்க்கான டோக்கன் தரப்படும்!

 

ஞாயிற்றுக் கிழமைகளிலும் 2000 ரூபாய்க்கான டோக்கன் தரப்படும்!

கொரோனா பேரிடரால் மக்கள் படும் இன்னல்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கடந்த ஆண்டு முதன்முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது மக்களுக்கு ரூ.1000 வழங்கியது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு. பாதிப்பு அதிகமாக இருந்த மாவட்டங்களுக்கு மட்டும் இரண்டாம் முறையாக ரூ.1000 வழங்கப்பட்டது. இந்த தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை.

ஞாயிற்றுக் கிழமைகளிலும் 2000 ரூபாய்க்கான டோக்கன் தரப்படும்!

தான் முதல்வராக பதவியேற்றால் கொரோனா நிதியாக ரூ.4000 வழங்குவேன் என சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். சொன்ன படியே அதனை செயல்படுத்தி காட்டி விட்டார். தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து கொரோனா நிவாரண நிதிக்கு தான். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 இரண்டு தவணையாக வழங்கப்படுமென அறிவித்தார். அதில், முதல் தவணையை இம்மாதமே கொடுக்க அவர் உத்தரவிட்டார்.

ஞாயிற்றுக் கிழமைகளிலும் 2000 ரூபாய்க்கான டோக்கன் தரப்படும்!

அதன் படி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் ரூ.2000க்கான டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர். இம்மாதத்திற்குள் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பணத்தை விநியோகம் செய்ய திட்டமிட்டிருக்கும் அரசு, ஞாயிற்றுக் கிழமைகளிலும் டோக்கன் விநியோகம் செய்யப்படுமென அறிவித்துள்ளது. இதற்காக வரும் 16ம் தேதி ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணி நாளாக அறிவித்துள்ள தமிழக அரசு, அதற்கான விடுமுறை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.