திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா!!

 

திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா!!

சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா!!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5441 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அத்துடன் 23 பேர் உயிரிழந்தனர். சென்னையை பொறுத்தவரை 1752 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் தி.நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா!!


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரான பழக்கடை ஜெயராமனின் இளையமகன் ஜெ.கருணாநிதி. இவரது அண்ணனும் மறைந்த எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சூழலில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெ. கருணாநிதி தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது