ஆதரவற்ற இல்லத்தில் 74 குழந்தைகளுக்கு கொரோனா!

 

ஆதரவற்ற இல்லத்தில் 74 குழந்தைகளுக்கு கொரோனா!

சென்னையில் ஆதரவற்றோர் இல்லத்தில் 74 குழந்தைகளுக்கு கொரோனா இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதரவற்ற இல்லத்தில் 74 குழந்தைகளுக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் ஒருநாள் ஒருநாள் பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு வரும் 24ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சிறார்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் . கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 10,000 சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

ஆதரவற்ற இல்லத்தில் 74 குழந்தைகளுக்கு கொரோனா!

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் பாலவிஹார் ஆதரவற்றோர் இல்லத்தில் மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத்திறன் குழந்தைகள் 74 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறன் குழந்தைகள் 175 பேரில் 74 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள் சம்பந்தபட்ட பள்ளியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆசிரியர் ஒருவர் மூலமாக குழந்தைகளுக்கு தொற்று பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவத் துறையும், மாநகராட்சியும் உரிய நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.