’பிரிட்டனிலிருந்து வந்த 5 பேருக்குக் கொரோனா’ தமிழக சுகாதார துறை

 

’பிரிட்டனிலிருந்து வந்த 5 பேருக்குக் கொரோனா’ தமிழக சுகாதார துறை

உலகளவில் 7 கோடியோ 98 லட்சத்துக்கு அதிமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 லட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். ஆயினும் 5.6 கோடிக்கும் அதிகமானவர்கள் சிகிச்சையால் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவின் தாக்குதலே இன்னும் முடியாத நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் தாக்கத் தொடங்கி விட்டது. பிரிட்டனில் இதன் தொடக்கம் அமைந்தது. அந்த நாட்டில் அதிவேகமாக புதிய வகை கொரோனா பரவியது.

’பிரிட்டனிலிருந்து வந்த 5 பேருக்குக் கொரோனா’ தமிழக சுகாதார துறை

பிரிட்டனில் இந்த புதிய வகை கொரோனா தாக்குதல் தொடங்கியது. அங்கிருந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. இந்தியாவிலும் அதன் தாக்கம் தெரியத் தொடங்கியுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று வந்தபோது அது வெளிநாட்டில் உள்ளது என தமிழகத்தில் அலட்சியமாக இருந்தோம். அதேபோல இப்போதும் இருக்க முடியாது. ஏனெனில், பிரிட்டனின் புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்திற்குள்ளும் நுழைந்து விட்டனவாம்.

’பிரிட்டனிலிருந்து வந்த 5 பேருக்குக் கொரோனா’ தமிழக சுகாதார துறை

தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் பேசுகையில், “பிரிட்டனிலிருந்து தமிழ்நாடு வந்தவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனால், தமிழக அரசு முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கி விட்டுள்ளது. தமிழ்நாட்டுக்குள் வந்திருக்கும் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், பிரிட்டன் சென்று தமிழ்நாடு திரும்பியவர்கள் அனைவருமே இந்தப் பரிசோதனையில் ஈடுபட வேண்டும் தமிழ்நாடு அரசின் சுகாதார துறை கேட்டுக்கொண்டது.