சபரிமலையில் 46 பேருக்கு கொரோனா: அதிர்ச்சியில் பக்தர்கள்!

 

சபரிமலையில் 46 பேருக்கு கொரோனா: அதிர்ச்சியில் பக்தர்கள்!

சபரிமலையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

சபரிமலையில் 46 பேருக்கு கொரோனா: அதிர்ச்சியில் பக்தர்கள்!

கேரளாவின் பிரசித்திபெற்ற ஆலயமான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை மாதம் தோறும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த முறை கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் சமீபத்தில் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

சபரிமலையில் 46 பேருக்கு கொரோனா: அதிர்ச்சியில் பக்தர்கள்!

ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம் என்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை 24 மணி நேரத்துக்கு முன் எடுத்திருக்க வேண்டும் என்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த சூழலில் சபரிமலையில் காவலர்கள், கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட 39 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேவஸ்தனம் போர்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா சோதனை பல்வேறு இடங்களில் நடத்திய பிறகே தரிசனத்துக்கு அனுமதி வழங்கிவருகிறது.

சபரிமலையில் 46 பேருக்கு கொரோனா: அதிர்ச்சியில் பக்தர்கள்!

இந்நிலையில் சபரிமலையில் கொரோனா பரவலைத் தடுக்க நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். கடந்த 12 நாட்களில் மட்டும் சுமார் 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது சபரிமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் சபரிமலையில் கூடுதலாக பக்தர்கள் அனுமதிக்க வாய்ப்புள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இதை கருத்தில் எடுத்துக் கொண்ட தேவஸ்தனம் போர்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க விதிமுறைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என முடிவெடுத்துள்ளனர்.