சென்னையில் குறையும் கொரோனா… கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் 81 ஆக குறைந்தது!

 

சென்னையில் குறையும் கொரோனா… கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் 81 ஆக குறைந்தது!

சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து, 180 மேல் இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை தற்போது 81 ஆகக் குறைந்துள்ளது.

சென்னையில் குறையும் கொரோனா… கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் 81 ஆக குறைந்தது!சென்னையில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக மோசமான அளவில் இருந்தது. இதனால் ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னையில் கொரோனா குறையத் தொடங்கியது. தற்போது, 1200 என்ற அளவில் தினசரி கொரோனா நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்ததால் நேற்று புதிய உச்சமாக 5849 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியானது.

சென்னையில் குறையும் கொரோனா… கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் 81 ஆக குறைந்தது!சென்னையில் நேற்று 1171 பேருக்கு கொரோனா உறுதியானது. 1731 பேர் டிஸ்சார் செய்யப்பட்டனர். அதிக அளவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாலும், புதிதாக நோய் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்படுவது குறைந்ததாலும் கட்டுப்பாட்டு பகுதிகள் நீக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் அதிகபட்சமா 188 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த பகுதிகளில் 14 நாட்கள் தொற்று ஏதும் இல்லை என்று உறுதியானதைத் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. 107 பகுதிகளில் இருந்த சீல் அகற்றப்பட்டு, மக்கள்

சென்னையில் குறையும் கொரோனா… கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் 81 ஆக குறைந்தது!சுதந்திரமாக வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 81 இடங்கள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது. அங்கும் நிலைமை விரைவில் சீரடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகபட்சமாக அண்ணாநகரில் 27 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது. அதிக கொரோனா பாதிப்பு இருந்த ராயபுரம் மண்டலத்தில் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதி ஒன்று கூட இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.