“தயவு செய்து மாஸ்க் போடுங்க” ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா ; பதறும் சுகாதாரத்துறை

 

“தயவு செய்து மாஸ்க் போடுங்க” ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா ; பதறும் சுகாதாரத்துறை

இந்தியாவில் மேலும் 53,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் 354 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1,21,49,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1,14,34,301 பேர் குணமடைந்துள்ளனர் .கொரோனாவிலிருந்து மேலும் 41,280 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5.52 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 1,62,468 பேர் உயிரிழந்துள்ளனர்.

“தயவு செய்து மாஸ்க் போடுங்க” ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா ; பதறும் சுகாதாரத்துறை

தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்றுஒரேநாளில் 2 ஆயிரத்து 342 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் சென்னையைப் பொறுத்தவரை மேலும் 874 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 846ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 16 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது.

“தயவு செய்து மாஸ்க் போடுங்க” ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா ; பதறும் சுகாதாரத்துறை

இந்நிலையில் சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கொரோனா பரவலைத் தடுக்க அனைவரும் தயவு செய்து முக கவசம் அணியுங்கள்.தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா ஏறுமுகம் கண்டுவருகிறது. கோவில் நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணியுங்கள், போர் வீரர்கள் போல் மருத்துவ பணியாளர்கள் சேவையாற்றி வருகின்றனர். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்க வருவோர் மாஸ்க் அணிய வேண்டும் என அரசியல் கட்சிகள் அறிவுறுத்துங்கள். கோவில் நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்களால் தான் கொரோனா வேகமாக பரவிவருகிறது. சென்னையில் கொரோனா பரவலை தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை அதிகம் ஆனாலும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.ஏப்ரல் 2ல் மேலும் 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வர உள்ளன” என்றார் .தொடர்ந்து பேசிய அவர் , சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது பாதிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,கோயம்புத்தூரில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் .50க்கும் மேற்பட்ட இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்