தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 70 ஆக குறைந்துள்ளது: சுகாதாரத்துறை செயலர் பேட்டி!

 

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 70 ஆக குறைந்துள்ளது: சுகாதாரத்துறை செயலர் பேட்டி!

தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் 70ஆக குறைந்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்தே தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த சென்னை இயல்பு நிலைக்கு திரும்புமா என்ற கேள்வி வெகுவாக எழுந்த நிலையில் நடமாடும் மருத்துவ முகாம், வீடு வீடாக கொரோனா பரிசோதனை போன்ற பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அரசு கையாண்டது. அதன் விளைவாக தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்து, 4 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமே இருக்கின்றன.

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 70 ஆக குறைந்துள்ளது: சுகாதாரத்துறை செயலர் பேட்டி!

அதே போல, சென்னை மக்கள் மூலமாக பிற மாவட்டங்களிலும் அதிகரித்த பாதிப்பு, தற்போது குறைந்து கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியார்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 120இல் இருந்து 70 ஆக குறைந்திருப்பதாகவும் கொரோனாவில் இருந்து 72% மக்கள் குணமடைந்து விட்டதாகவும் கூறினார்.

மேலும், சென்னையில் 4 மண்டலங்களை தவிர மற்ற இடங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.