2 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்த கொரோனா மரணம் : ஆறுதல் அளிக்கும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

 

2 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்த கொரோனா மரணம் : ஆறுதல் அளிக்கும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்படும் மரணங்கள் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதே போல, உயிரிழப்புகளும் கணிசமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,587 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

2 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்த கொரோனா மரணம் : ஆறுதல் அளிக்கும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 62,480 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 88,977 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும் 7,98,656 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 73 நாட்களுக்கு பிறகு 8 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும், மொத்த பாதிப்பு 2,97,62,793 ஆகவும் மொத்த உயிரிழப்புகள் 3,83,490 ஆகவும் உயர்ந்துள்ளது. பாதிப்பு குறைவதாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை, விரைவில் இந்தியா இயல்பு திரும்பும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.