அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 99 ஆயிரத்தை கடந்தது

 

அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 99 ஆயிரத்தை கடந்தது

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 99 ஆயிரத்தை கடந்தது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 3 லட்சத்து 46 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 55 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 23 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும் தற்போது அந்த நாட்டில் பெருமளவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 99 ஆயிரத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 99,300-ஆக அதிகரித்துள்ளது. இன்று இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கொரோனாவால் 16 லட்சத்து 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28,752-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 282,852 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32,785-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 229,858 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28,367-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 182,584 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.