Home உலகம் அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 450 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 450 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 450 பேர் உயிரிழந்துள்ளனர்.

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 450 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 4 லட்சத்து 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 71 லட்சத்து 99 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 32 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும், கொரோனா பலி எண்ணிக்கை பட்டியலில் அந்நாடு தற்போது 18-வது இடத்திற்கு சென்று விட்டது.

USA

ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 110,932-ஆக உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 450 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 19 லட்சத்து 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Most Popular

இயேசுதாஸ் எங்கே? மவுனம் ஏன்?

எண்பதுகளின் இசைவானத்தில் இயேசுதாஸ் - எஸ்.பி.பி.தான் சூரியன் சந்திரன். விஜய்யும் அஜீத்தும் இணைந்து நடித்தால் இன்றைக்கு எத்தனை வரவேற்பு இருக்குமோ அந்த அளவிற்கு அன்றைக்கு இயேசுதாசும் எஸ்.பி.பியும் இணைந்து பாடிய...

எஸ்பிபியின் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெற வேண்டும்! முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக அரை நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கி பத்மஸ்ரீ- பத்மபூஷண் விருதுகள் பெற்ற எஸ்பிபியின் இறுதிப்பயணம் உலகெங்கிலும் வாழும் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழு அரசு...

எஸ்பிபி- இளையராஜா நட்பில் சாகாவரம் பெற்ற பாடல்கள்…

திரையிசை பயணத்தை தொடங்குவதற்கு முன்பிருந்தே இளையராஜாவும்- எஸ்.பி.பியும் நெருங்கிய நண்பர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களின் நட்புக்கு 50 வயதாகிறது. ஆனால் அந்த நட்பினை வாரிசுகள் வந்த கெடுத்தனர் என்றுதான்...

சசிகலாவால் அரசியலில் பெரிதாக சாதிக்க முடியாது: பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. திமுகவை பொறுத்தவரை கூட்டணியிலும், முதல்வர் வேட்பாளர் பதவியிலும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதிமுகவிலோ...
Do NOT follow this link or you will be banned from the site!