திருவள்ளூரில் 18 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

 

திருவள்ளூரில் 18 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதில் இருந்து மக்களை காக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருவள்ளூரில் 18 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

நேற்றைய தினம் 10 மாநில முதலமைச்சர்கள் உடன் காணொலி காட்சி வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி இந்தியாவின் 10 மாநிலங்கள் மட்டுமே கொரோனா பாதிப்பு  அதிகம் உள்ளதாகவும் அதை கட்டுக்குள் கொண்டுவந்தால் இந்தியா வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் என்றும் கூறியிருந்தார். அதைப்போல் கொரோனா பாதிப்பு குறித்து 10 மாவட்டங்களில் தடுப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வந்த முதல்வர் பழனிசாமி, தமிழகம் கொரோனாவுக்கு எதிராக போராடி வருவதாகவும், மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

திருவள்ளூரில் 18 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 407 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 18,113 ஆக உயர்ந்துள்ளது. இதனால்  திருவள்ளூரில்  கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை கடந்தது.திருவள்ளூரில் தொடர்ந்து சமூக இடைவெளியும், அரசின் நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும் முழு ஊரடங்கு நேரங்களிலும் கூட கடைகள் சில திறந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளன.