மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி

2020 மார்ச் மாதம் கொரோனா அலை இந்தியாவில் வீசத் தொடங்கியது. உடனே மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இதனால் நோய்த் தொற்று பரவல் கட்டுப்படும் என்று கருதினர். மாறாக நாள்தோறும் புதிய நோயாளிகள் அதிகரித்துக்கொண்டே சென்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்த நாள் வரை கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் முழு தீவிரத்துடன் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டறிய முயற்சி எடுத்து வருகின்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சென்ற வாரம் கோவாக்ஸின் மருந்து 30 வயது இளைஞர் உடலுக்குள் செலுத்தி பரிசோதனை செயய்ப்பட்டுள்ளது.

புதிய நோயாளிகள் அதிகரித்தாலும் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இறப்போரின் சதவிகிதம் குறைவதும் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்திகளே.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி

ஆயினும் நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று பரவுவது கவலை அளிக்கக் கூடியவையே. இந்நிலையில் நம் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமித்ஷாவின் உடல் இயல்பாக இருந்தாலும் நோய்த் தொற்று உறுதியானதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டிருக்கிறார். இந்தச் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே பதிவு செய்திருக்கிறார்.