Home சினிமா பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா உறுதி: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா உறுதி: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கொரோனாவால் முடக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மீண்டும் தொடங்கியிருக்கும் நிலையில், பிரபலங்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அந்த வகையில், ஹைதராபாத்தில் “மே டே” படத்தில் நடித்து வந்த பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியபட்டுள்ளது.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” எனக்கு கொரோனா உறுதியானதால் நான் தனிமைபடுத்திக் கொண்டேன். உடல்நலம் நலமாக இருக்கிறது. நான் இப்போது நன்றாக ஓய்வெடுத்தால் தான் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியும். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் தாங்கள் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக ரசிகர்கள் அந்த ட்வீட்டுக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

rakulpreet

அண்மையில் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் பங்கேற்ற நடிகை தமன்னா மற்றும் நடிகர் சரத் குமாருக்கு கொரோனா உறுதியானது. ஷூட்டிங்கில் பங்கேற்கும் பலருக்கு கொரோனா பரவி வரும் நிலையில், தற்போது புதிய வகை கொரோனா பரவுவதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரகுல் ப்ரீத் சிங் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்று வந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்ளி கல்வித்துறை

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டும் ஆல் பாஸ் அறிவிப்பு வந்திருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு...

திடீர் உடலநலக்குறைவால் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார்...

50 தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு காங்கிரஸ் கடிதம்! 20 தான் முடியும் என்கிறது திமுக

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. கூட்டணி உறுதி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸின் மூத்த தலைவரான உம்மன் சாண்டி, தமிழக காங்கிரஸ் கட்சியின்...
TopTamilNews