சென்னை தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா.. மாற்றம் செய்யப்பட்டதா தேர்வுத்துறை அலுவலகம்?!

 

சென்னை தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா.. மாற்றம் செய்யப்பட்டதா தேர்வுத்துறை அலுவலகம்?!

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 19,000ஐ எட்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே12,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் என பாரபட்சமின்றி எல்லாருக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதே போல சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரியும் 20 பேருக்கு ஏற்கனவே கொரோனா பரவிய நிலையில், மேலும் 4 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா.. மாற்றம் செய்யப்பட்டதா தேர்வுத்துறை அலுவலகம்?!

இந்நிலையில் சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இதனால் தேர்வுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இயக்குனர் உஷாராணி தேர்வுத்துறை அலுவலகத்தை மாற்றம் செய்து விட்டதாகவும் அங்கு கொரோனா தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அடுத்த மாதம் நடக்கவிருக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் நடத்த தேர்வுத்துறை அதிகாரிகள் அச்சப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.