தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி ராகவனுக்கு கொரோனா உறுதி!

 

தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி ராகவனுக்கு கொரோனா உறுதி!

பாஜக பொதுச் செயலாளர் கே.டி ராகவனுக்கு லேசான அறிகுறி இருந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருக்கிறது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் கே.டி.ராகவன். திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உட்பட மொத்தம் 12 மாவட்டங்களில் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பாஜகவின் தேர்தல் பணிக்காக, கே.டி ராகவன் அந்தந்த மாவட்டங்களில் பூத் கமிட்டிகள் மற்றும் கட்சிப் பணிகளை ஆய்வு செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி ராகவனுக்கு கொரோனா உறுதி!

இதனால் அவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் லேசான ஜலதோ‌ஷம் ஏற்பட்டதைத் தொடர்ந்து காய்ச்சலும் இருந்திருக்கிறது. கொரோனா அறிகுறி இருப்பதை உணர்ந்த கே.டி ராகவன் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியிருக்கிறது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முன்னதாக பாஜக மூத்த நிர்வாகிகள் இல.கணேசன் மற்றும் சி.பி.ராதாகிருஷ்

ணன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.