குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி!

 

குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி!

குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமசந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பாரபட்சமின்றி கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. குறிப்பாக திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் பலருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால், எம்எல்ஏக்கள் எல்லாருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. அந்த பரிசோதனையில் ஒரு சில எம்எல்ஏக்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி!

இந்த நிலையில் குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர் உடல்நலக்குறைவால் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போதே, பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப் பட்டு கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்.