விமானத்தில் பயணம் செய்த இளைஞருக்கு கொரோனா..பாதிப்பு தெரியாமல் விமானம் ரிட்டன் சென்னை வந்ததால் பீதியில் பயணிகள்!

கொரோனா வைரஸால் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், 114 பேர் பயணித்த சென்னை- கோவை இண்டிகோ விமானத்தில் ஒரு இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த அந்த இளைஞர் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இண்டிகோ விமானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 25 ஆம் தேதி சென்னையில் இருந்து வந்த இளைஞர் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருடன் பயணித்த எல்லா பயணிகளுக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்துள்ள தால் மற்ற பயணிகளுக்கு கொரோனா பரவ வாய்ப்பு குறைவு. தங்களின் அனைத்து விமானங்களும் முறையாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த நபர் பயணித்த விமானமும் தூய்மை படுத்தப்பட்டது.

மேலும், அந்த விமானத்தை இயக்கிய குழுவினர் தனிமைப்படுத்திக் கொண்டதால் பயணிகளின் பாதுகாப்பை கண்காணித்து உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளது. அந்த இளைஞருடன் பயணித்த 113 பேருக்கும் கொரோனா இல்லை என்றாலும், அந்த விமானம் கோவையில் 8 மணிக்கு தரையிறங்கி மீண்டும் 8.40 மணிக்கு சென்னை புறப்பட்டு வந்துள்ளது. அதனால் அப்போது பயணித்த எல்லா பயணிகளையும் சோதனை செய்யுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...