#BREAKING பள்ளி மாணவிகளின் பெற்றோருக்கும் கொரோனா!

 

#BREAKING பள்ளி மாணவிகளின் பெற்றோருக்கும் கொரோனா!

அம்மாபேட்டையில் 56 மாணவிகள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் பெற்றோருக்கும் தொற்று பரவி இருப்பது உறுதியாகியுள்ளது.

#BREAKING பள்ளி மாணவிகளின் பெற்றோருக்கும் கொரோனா!

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கிடந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 12 ஆம் வகுப்புக்கு மே 3 ஆம் தேதி பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

#BREAKING பள்ளி மாணவிகளின் பெற்றோருக்கும் கொரோனா!

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோரில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 56 மாணவிகளுக்கு கொரோனா உறுதியான நிலையில் 5 பெற்றோருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது. மாணவிகளின் பெற்றோர், உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 5 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் 350 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.முன்னதாக கடந்த 14 ஆம் தேதி 56 மாணவிகளுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அப்பள்ளி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அத்துடன் அங்கு சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.