மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரோனா உறுதி!

 

மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆரம்ப கட்டத்தில் குறைவாகவே இருந்த கொரோனா பாதிப்பு நாட்கள் செல்ல செல்ல பன்மடங்கு அதிகரித்தது. சீனா அளவுக்கு கொரோனா நம் நாட்டில் பரவாது என கருதப்பட்ட நிலையில், ஒரு சில மாதங்களிலேயே கொரோனா பாதிப்பு சீன பாதிப்பின் அளவை எட்டியது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க பாடத சூழலிலும், குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மக்களை ஆறுதல் அடைய செய்கிறது. இதனிடையே சாதாரண மக்கள் முதல்வர் அரசியல் தலைவர்கள் வரை பலருக்கும் கொரோனா பரவியுள்ளது.

மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரோனா உறுதி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த தகவல் உண்மையல்ல என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது. இந்த நிலையில் மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவில் கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்ததால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.