தமிழகத்தில் வேகம் காட்டும் கொரோனா : குமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் வேகமெடுக்கும் தொற்று!

 

தமிழகத்தில் வேகம் காட்டும் கொரோனா : குமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில்  வேகமெடுக்கும் தொற்று!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,231 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வேகம் காட்டும் கொரோனா : குமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில்  வேகமெடுக்கும் தொற்று!

நேற்று மட்டும் 65பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வேகம் காட்டும் கொரோனா : குமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில்  வேகமெடுக்கும் தொற்று!

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,132 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் புதுக்கோட்டை மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 535 ஆக அதிகரித்துள்ளது.