“போ போ கூட்டம் போடாத போ”.. வடிவேலு டயலாக்கை வைத்து கொரோனா விழுப்புணர்வு.. வைரலாகும் மெடிக்கல் ஷாப்!

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரது காமெடியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவ்வாறு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் சமீப காலமாக படங்களில் நடிக்காமல் விளக்கியிருக்கிறார். இருப்பினும் மீம்ஸ்களின் மூலமாகவோ அல்லது சோஷியல் மீடியாக்கள் மூலமாகவோ அடிக்கடி இவரது காமெடி ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த நிலையில, ஒரு கடையில் கொரோனா விழுப்புணர்வுக்காக வடிவேலுவின் டயலாக்குகள் போடப்பட்டுள்ளது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் மக்கள் கூட்டமாக கூட வேண்டாம் என்றும் மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கடைகளுக்கு செல்லும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதனால், ஒரு மெடிக்கலில் “முகக் கவசம் அணிபவர்கள் மட்டும் உள்ளே வா, போ போ கூட்டம் போடாத போ, தம்பி போங்க தம்பி மாஸ்க் போட்டுட்டு வாங்க” உள்ளிட்ட டயலாக்குகள் அச்சிடப்பட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Most Popular

சென்னையில் 24 கட்டுபாட்டு பகுதிகள் தான் இருக்கின்றன : மாநகராட்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்க அரசும் மாவட்ட நிர்வாகங்களும் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்து கொண்டிருப்பினும் பாதிப்பு குறைந்ததாக இல்லை. குறிப்பாக சென்னையில் தான்...

பாஜகவில் இணையும் கு.க.செல்வம் : திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வரும் இவர் திமுக தலைமையிடத்துக்கு நெருக்கமானவர். இதனிடையே சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ...

நெல் ஈரமாக இருந்தாலும் கொள்முதல் செய்யப்படும் : அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி, சென்னை மட்டுமில்லாமல் திருவாரூர், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது....

`நள்ளிரவில் வேட்டை; சுட்டுக்கொல்லப்பட்ட வாலிபர்!’- ஊத்தரங்கரையில் நடந்த பயங்கரம்

நள்ளிரவில் மான் வேட்டைக்கு சென்ற வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஊத்தரங்கரையில் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ளது இளவம்பாடி காப்புக்காடு பகுதியில் அதிகமாக மான்,...