சிலம்பாட்டத்துடன்..தஞ்சையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி!

 

சிலம்பாட்டத்துடன்..தஞ்சையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி!

தஞ்சையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் கொரோனா விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

சிலம்பாட்டத்துடன்..தஞ்சையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு 5ம் முறையாக தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இன்று முதல் அளவானது. எல்லா சேவைகளுக்கும் அரசு அனுமதி வழங்கி இருந்தாலும், கொரோனா பற்றிய புரிதல் இல்லாததால் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தஞ்சையிலும் பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் களமிறங்கியது தஞ்சை மாவட்ட நிர்வாகம்.

சிலம்பாட்டத்துடன்..தஞ்சையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி!

தஞ்சை ரயில் நிலையத்தில் தொடங்கிய கொரோனா விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் கோவிந்தராவ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியின் முன்பு சிலம்பாட்ட வீரர்கள் ஆடிய படி செல்ல, கைகளில் கொரோனா விழுப்புணர்வு பற்றிய பதாகைகள் ஏந்திய படி பொதுமக்கள் பின்தொடர்ந்து சென்றனர். அந்த பேரணியில், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தஞ்சை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். தஞ்சையின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது.