நியூசிலாந்தைப் போலவே தாய்லாந்திலும் 100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா!

நியூசிலாந்தைப் போலவே தாய்லாந்திலும் 100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா!

கொரோனா நோய்த் தொற்றை ஓரளவு ஒழித்த நாடுகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணங்களாக நியூசிலாந்தும் தாய்லாந்தும் உள்ளன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 64 லட்சத்து  68 ஆயிரத்து 013 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 86 லட்சத்து 61 ஆயிரத்து 847 நபர்கள்.

நியூசிலாந்தைப் போலவே தாய்லாந்திலும் 100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா!

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 73 ஆயிரத்து 221 பேர்.

கடந்த மாதத்தில் 100 நாட்கள் புதிய கொரோனா நோயாளிகள் இல்லை என நியூசிலாந்து நாடு அறிவித்தது. ஆனால், அதற்கடுத்த இரண்டே நாளில் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு விட்டனர். இதனால், அந்த நாட்டில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தேர்தலும் ஒரு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.

நியூசிலாந்தின் நிலைமை தாய்லாந்துக்கும் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இதுவரை 3431 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்று பரவியது. அவர்களில் 3277 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 58 பேர் சிகிச்சை பலன் அளிக்காது இறந்துவிட்டனர்.

நியூசிலாந்தைப் போலவே தாய்லாந்திலும் 100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா!

கடந்த 100 நாட்களாக புதிய கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை என்று நிம்மதியாக இருந்த தாய்லாந்து அரசுக்கு புதிய தலைவலி வந்துவிட்டது.

ஆமாம். போதை பொருள் கடத்தல் வழக்கில் பாங்காங்கில் ஒருவர் கைதானார். அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்ததில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. எனவே, அவர் பயணத்தை ட்ரேஸ் செய்யும் பணிகளில் இறங்கியிருக்கிறது தாய்லாந்து அரசு.

நியூசிலாந்தைப் போலவே தாய்லாந்திலும் 100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா!

தற்போதைய தகவல் படி, 4 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.