31 ஊழியர்களுக்கு உறுதியானது கொரோனா… தினத் தந்தி அலுவலகம் தற்காலிக இடமாற்றம் !

 

31 ஊழியர்களுக்கு உறுதியானது கொரோனா…  தினத் தந்தி அலுவலகம் தற்காலிக இடமாற்றம் !

தினத்தந்தி அலுவலகத்தில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதனால், சென்னை புறநகர்ப் பகுதிக்கு தந்தி அலுவலகம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

31 ஊழியர்களுக்கு உறுதியானது கொரோனா…  தினத் தந்தி அலுவலகம் தற்காலிக இடமாற்றம் !சென்னை வேப்பேரியில் தினத் தந்தி பத்திரிகை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டிடத்தில் மாலை மலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் பத்திரிகைகள் எந்த தடையுமின்றி செயல்பட்டு வருகின்றன. ஆனால், களத்துக்குச் சென்று வரும் நிருபர்கள், புகைப்பட கலைஞர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் பல தொலைக்காட்சி, அச்சு ஊடக ஊழியர்களுக்கு கொரோனா பரவியது.

31 ஊழியர்களுக்கு உறுதியானது கொரோனா…  தினத் தந்தி அலுவலகம் தற்காலிக இடமாற்றம் !அதேபோல், தினத்தந்தி பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றி வரும் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தினத்தந்தி அலுவலகம் தற்காலிகமாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த பிறகு, வேப்பேரி அலுவலகம் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.