`விடைபெறுகின்றேன்!’- கண்கலங்கை வைக்கும் விருத்தாசலம் தாசில்தாரின் பேஸ்புக் பதிவு

 

`விடைபெறுகின்றேன்!’- கண்கலங்கை வைக்கும் விருத்தாசலம் தாசில்தாரின் பேஸ்புக் பதிவு

மக்களின் குறைகளை உடனடியாக நிறைவேற்றி வந்ததோடு, அவர்களிடம் அன்பாக பழகிய விருத்தாசலம் தாசில்தார் கவியரசு, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பு அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள உருக்கமான பதிவு கண்கலங்க வைத்துள்ளது.

`விடைபெறுகின்றேன்!’- கண்கலங்கை வைக்கும் விருத்தாசலம் தாசில்தாரின் பேஸ்புக் பதிவு

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் வட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் கவியரசு. கொரோனா காலத்தில் மக்கள் பணியில் தீவிரமாக களமிறங்கி வேலை செய்து வந்தார். அவரை மக்கள் எளிதாக சந்தித்து தங்களை குறைகளை தெரிவித்து வந்தனர். இதனால் மக்களிடம் நன்மதிப்பை பெற்றுத் திகழ்ந்தார். இந்த நிலையில், கொரோனா தொற்று இவரை தாக்கியது. இதையடுத்து, சிதம்பரம் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் அவர் பகிர்ந்த முகநூல் பதிவில், “அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய விருதை வட்ட வாழ் பெருங்குடி மக்களே! என் மேல் எப்போதும் பாசமழை பொழியும் ஊடக நண்பர்களே! எப்போதும் அன்பு பாராட்டும் காவல் அலுவலர்களே! எனது இரண்டாண்டு வருவாய் வட்டாட்சியர் பணியில் உடன் பயணித்த எனது பாசமிக்க கிராம நிர்வாக அலுவர்களே! அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களே! வருவாய ஆய்வாளர்களே ! கிராம உதவியாளர்களே ! உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை சிரம் தாழ்த்தி சமர்ப்பித்துக்கொள்கின்றேன்.

`விடைபெறுகின்றேன்!’- கண்கலங்கை வைக்கும் விருத்தாசலம் தாசில்தாரின் பேஸ்புக் பதிவு

COVID-19 symptoms காரணமாக தற்போது சிதம்பரம் RMMCH மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளதால் வருவாய் வட்டாட்சியர் பணியில் இருந்து விலகி விடைபெறுகின்றேன்! சிறப்பு நன்றிகள் எனது ஈப்பு ஓட்டுனர் பாலு ஒரு சகோதரனைப்போல இதுகாறும் எனை பாதுகாத்தாய் ! மீண்டும் மீண்டு வந்து அனைவருக்கும் நன்றி சொல்வேன் என்ற நம்பிக்கையுடன் !” என்று தெரிவித்திருந்தார்.

கவியரசை நேசிக்கும் ஊர்மக்களும், நண்பர்களும் சமூகவலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள் தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும், தற்காப்புடன் பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு இந்த பதிவு அதிகம் பகிரப்பட்டு வருகிறது.