நம்பிக்கை கொடுத்த முக்கிய 8 துறைகள் உற்பத்தி.. 32 மாதங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி

நம்பிக்கை கொடுத்த முக்கிய 8 துறைகள் உற்பத்தி.. 32 மாதங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி

2021 மார்ச் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 32 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

முக்கிய 8 துறைகள் என்பது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகியவையாகும். தொழில் மற்றும் உள் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை கடந்த மார்ச் மாத முக்கிய 8 துறைகளின் உற்பத்தி குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 32 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

நம்பிக்கை கொடுத்த முக்கிய 8 துறைகள் உற்பத்தி.. 32 மாதங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி
ஸ்டீல்

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் 3.8 சதவீதமும், 2020 மார்ச் மாதத்தில் 8.6 சதவீதமும் குறைந்து இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் 2வது அலை காரணமாக பல மாநிலங்களில் தொழில்துறை உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது, லாக்டவுனும் விதிக்கப்பட்டுள்ளது. இது வரும் மாதங்களில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை கொடுத்த முக்கிய 8 துறைகள் உற்பத்தி.. 32 மாதங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி
நிலக்கரி

கடந்த மார்ச் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தியும் வளர்ச்சி கண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறை குறியீட்டை கணக்கிடுவதில் இந்த 8 துறைகளின் பங்களிப்பு சுமார் 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதனால் எட்டு துறைகளின் துறைகளின் வளர்ச்சியை வைத்தே தொழில்துறை வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஓரளவு யூகிக்க முடியும்.