“கேமெராவை உடைத்து ,மின்சார ஒயரை அறுத்து ..”-.குடிபோதையில் இன்ஸ்பெக்டரின் இம்சைகள்

 

“கேமெராவை உடைத்து ,மின்சார ஒயரை அறுத்து ..”-.குடிபோதையில் இன்ஸ்பெக்டரின் இம்சைகள்

முன்னாள் ராணுவ அதிகாரி வீட்டினருகே வசித்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் குடிபோதையில் அவர்கள் வீட்டு சிசிடிவி கேமரா மற்றும் மின்சாரபொருட்களை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்

ஹரியானா மாநிலம் சண்டிகரின் செக்டர் 47 இல் வசிக்கும் 60 வயது பெண் தனது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான 67வயது கணவரோடு வசித்து வருகிறார் .அந்த முதிய தம்பதிகள் தங்களின் பாதுகாப்புக்காக வீட்டின் அருகே சிசிடிவி கேமெராவை நிறுவியுள்ளார்கள் .அவர்கள் தனியாக வசிப்பதால் அவர்கள் குற்றங்களை தடுக்கவும் ,தங்களின் உயிரை பாதுகாக்கவும் தங்களின் சொந்த செலவில் அந்த பகுதியில் அந்த கேமராவினை பதித்துள்ளார்கள்
அவர்களின் வீட்டருகே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் குர்னம் சிங் என்பவர் ஒரு நாள் குடித் துவிட்டு வந்து அவர்களின் காமெராவை சேதப்படுத்தியும் ,அந்த முதிய தம்பதிகளை தரக்குறைவாக பேசியும் ,அவர்களின் வீட்டிலிருந்து தன்னுடைய வீட்டிற்கு திருட்டு தனமாக மின்சாரத்தை திருடியும் தொல்லை கொடுத்துள்ளார் .இதனால் அந்த முதிய தம்பதிகள் அந்த போலீஸ் அதிகாரி மீது அவரின் உயரதிகாரிகளிடம் புகாரளித்தார்கள் . .


அது மட்டுமல்லாமல் அநத இன்ஸ்பெக்ட்டர் செய்யும் சேட்டைகள் பதிந்துள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் உயரதிகாரிகளிடம் காண்பித்தார்கள் .அந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸ் அதிகாரிகள் அந்த இன்ஸ்பெக்ட்டர் குர்ணம் சின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்
அதன் படி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது .

“கேமெராவை உடைத்து ,மின்சார ஒயரை அறுத்து ..”-.குடிபோதையில் இன்ஸ்பெக்டரின் இம்சைகள்