கரும்பு அரவையை தொடங்க கோரி, தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

 

கரும்பு அரவையை தொடங்க கோரி, தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க வலியுறுத்தி, 9-வது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், கேத்தாண்டிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கரும்பு அரவை நடைபெறாது என ஆலை நிர்வாகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலை தொழிலாளர்கள், கடந்த 7-ஆம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரும்பு அரவையை தொடங்க கோரி, தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

இன்று 9-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு தலைவர் அன்பழகன் தலைமையில் 230-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய, அன்பழகன், நடப்பு ஆண்டு ஒரு லட்சம் டன் கரும்புகளை அரவை செய்ய ஒப்புதல் கேட்டு விவசாயிகள் ஆலை நிர்வாகத்துக்குக் கடிதம் அனுப்பி உள்ளதாகவும், ஆனால், ஆலை நிர்வாகம் இதையெல்லாம் ஏற்காமல் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அரவைக்காக அனுப்பி வைப்பதகாவும் குற்றம்சாட்டினார். மேலும், தொழிலாளர்களுக்கு தர வேண்டிய 8 மாத சம்பள தொகையை தாமதமின்றி வழங்கவும் அவர் கோரிக்கை விடுத்தார்.