”பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் கூல்பேட் கூல் 6 போன் அறிமுகம்”

 

”பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் கூல்பேட் கூல் 6 போன் அறிமுகம்”

கூல்பேட் நிறுவனம், கூல்பேட் கூல் 6 என்ற 21 மெகா பிக்சல் பாப் – அப் செல்ஃபி கேமராவுடன் கூடிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் கூல்பேட் கூல் 5 போனை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக கூல்பேட் கூல் 6 போனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த போன் ஆண்டிராய்ட் 10 இயங்குதளம், மீடியாடெக் ஹீலியோ பி70 ஆக்டோ கோர் பிராசசர், 4ஜிபி மற்றும் 6ஜிபி இருவேறு ரேம் வகைகளில் வெளிவருகிறது.

”பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் கூல்பேட் கூல் 6 போன் அறிமுகம்”

6.53 இன்ச் ஃபுல் எச்டி திரை, இரண்டு சிம் கார்டு இணைக்கும் வசதி, புளூடூத், வைபை, யுஎஸ்பி டைப் சி போர்ட், 4000 எம்ஏஎச் பேட்டரி, பின்புறத்தில் விரல் ரேகை சென்சார் என சகல வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. சுமார் 120 கிராம் எடை கொண்ட இந்த போன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரு வேறு மெமரி அளவுகளில் அறிமுகமாகி உள்ளது. இதன் மெமரியை 256 ஜிபி வரை நீட்டித்துக்கொள்ளலாம். மேலும் திரையின் மேல்புறத்திலோ அல்லது ஓரத்திலோ நாட்ச் அல்லது ஹோல் பன்ச் கட் அவுட் என்ற பெயரில் செல்ஃபி கேமரா வைக்கபடாததால், முழுமையாக திரையை காணும் அனுபவத்தை பெற முடியும் என தெரிகிறது.

”பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் கூல்பேட் கூல் 6 போன் அறிமுகம்”

கேமராவை பொறுத்தவரை, பின்புறத்தில் 48 மெகா பிக்சல் கேமராவுடன், இரு 2 மெகா பிக்சல் கேமராக்கள் உள்ளன. முன்புறத்தில் 21 மெகா பிக்சல் பாப்-அப் செல்ஃபி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் 4 ஜிபி ரேம் – 64 ஜிபி மெமரி மாடல் ரூ 10,999க்கும், 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 12,999க்கும் அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது.

  • எஸ். முத்துக்குமார்