கொரோனா தாக்கிய ட்ரம்ப் – மாஸ்க் போடாததால் சர்ச்சை

 

கொரோனா தாக்கிய ட்ரம்ப் – மாஸ்க் போடாததால் சர்ச்சை

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முதன்மை உதவியாளர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் அதிபர் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொள்ளும்போடு உடன் இருந்தவர்.

கொரோனா தாக்கிய ட்ரம்ப் – மாஸ்க் போடாததால் சர்ச்சை

அதனால், ட்ரம்ப்க்கும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப்க்கும் பரிசோதனை செய்ததில் இருவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையிலிருந்து நேற்று வெள்ளை மாளிகை திரும்பினார்.

கொரோனா தாக்கிய ட்ரம்ப் – மாஸ்க் போடாததால் சர்ச்சை

அப்போது ஹெலிகாப்டரிலிருந்து இறங்கி மாளிகைக்குள் செல்லுகையில் மாஸ்கை எடுத்துவிட்டு, எல்லோருக்கும் சல்யூட் அடித்தார். இந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. கொரோனா தொற்றில் தற்போதுதான் சிகிச்சை முடிந்து வரும் நிலையில் மாஸ்க்கைக் கழற்றியது சரிதானா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கொரோனா தொற்றுக்கு அடுத்து மாஸ்க் சர்ச்சை ட்ரம்பைத் தொடர்கிறது. அவர் இன்னும் சில நாட்களில் வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.