கனிமொழி ஏற்படுத்திய சர்ச்சை – உண்மை நிலவரம் என்ன?

 

கனிமொழி ஏற்படுத்திய சர்ச்சை – உண்மை நிலவரம் என்ன?

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூத்துக்குடி மாநகரில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மில்லர்புரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடையினை அண்மையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்துவைத்தார்.

கனிமொழி ஏற்படுத்திய சர்ச்சை – உண்மை நிலவரம் என்ன?

அப்போது அந்த பேருந்து நிழற்குடை அருகே இருந்த கல்வெட்டினையும் அவர் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் நிழற்குடை 154 லட்சத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் ஒரு பேருந்து நிழற்குடை அமைக்க 154 லட்சமா என்று சலசலப்பு எழுந்தது.

கனிமொழி ஏற்படுத்திய சர்ச்சை – உண்மை நிலவரம் என்ன?

இதுக்கு போய் இவ்வளவு செலவா என்று தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியிருந்தார். சமூக வலைதளங்களில் பலரும் இதுகுறித்து கமெண்ட் அடித்து வந்தனர். கடுமையாக விமர்சித்து வந்தனர்.

கனிமொழி ஏற்படுத்திய சர்ச்சை – உண்மை நிலவரம் என்ன?

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி இதற்கு விளக்கம் அளித்திருக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் கட்டப்பட்டு வரும் எட்டு பேருந்து நிழற்குடைகளும் அன்றைக்கு திறந்துவைக்கப்பட்டது . அதன் மொத்த மதிப்பு ஒரு கோடியே 54 லட்சம் என்று விளக்கம் சொல்லி இருக்கிறது. ஆனால் ஒரு நிழல்குடையின் கல்வெட்டில் மட்டும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் செயின் மேரிஸ் பள்ளி நவீன பேருந்து நிழற்குடை அமைத்தல்.. மதிப்பீடு ரூ 154 லட்சம் என்று கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 8 நிழற்குடைகள் அமைக்க 154 லட்சம் செலவு செய்யப்பட்டது என்றால், அதை குறிப்பிட வேண்டியதுதானே ஏன் ஒரு நிழற்குடை அமைக்க 154 லட்சம் செலவானது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்ற கேள்வியை மீண்டும் எழுப்பி வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கனிமொழி ஏற்படுத்திய சர்ச்சை – உண்மை நிலவரம் என்ன?

இந்த விவகாரத்தின் உண்மை நிலவரம் என்ன? என்பது தெரியவரும் வரைக்கும் சலசலப்பு ஓயாது என்றே தெரிகிறது.