“ஏரோபிளேன்ல ஏண்டா ஒண்ணுக்கு போக விடமாட்றிங்க..” -கோபமான பயணி செஞ்ச வேலை .

 

“ஏரோபிளேன்ல ஏண்டா ஒண்ணுக்கு போக விடமாட்றிங்க..” -கோபமான பயணி செஞ்ச வேலை .


ஒரு கான்ட்ராக்டரை விமானத்தில் சிறுநீர் கழிக்க விடாமல் தடுத்ததால் கோபமடைந்த அவர் சிவில் ஏவியேஷன் ஊழியரை கடத்தி சென்றார்

“ஏரோபிளேன்ல ஏண்டா ஒண்ணுக்கு போக விடமாட்றிங்க..” -கோபமான பயணி செஞ்ச வேலை .


டெல்லியில் வசிக்கும் ஒப்பந்தக்காரர் வைபவ் சதுர்வேதி என்பவர் அடிக்கடி தன்னுடைய பணி நிமித்தமாக விமான பயணம் மேற்கொள்வார் .அதன் படி கடந்த வாரம் ஒரு நாள் அவர் விமான பயணம் மேற்கொண்டு விட்டு ஒரு விமானத்தில் டெல்லிக்கு வந்து கொண்டிந்தார் .அப்போது விமானம் தரையிறங்கும் நேரத்தில் சதுர்வேதி சிறுநீர் கழிக்க விமானத்திலுள்ள கழிப்பறைக்கு சென்றார் .அப்போது அந்த விமானத்தின் ஊழியர் ஒருவர் அவரிடம் விமானம் தரையிறங்கும் நேரத்தில் கழிப்பறைக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறினார் .
ஒரு டயாபடீக் நோயாளியான சதுர்வேதி சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டார் .அதன் பிறகு அவர் விமானத்திலிருந்து இறங்கியதும் அங்குள்ள சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் (டிஜிசிஏ) புகாரளிக்க சென்றார் .அப்போது அங்கிருந்த பல ஊழியர்களிடம் தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் .பிறகு சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தின் (டிஜிசிஏ)ஊழியரான சுரேந்தர் பிரசாத் என்பவரை தன்னுடைய காரில் கடத்தி சென்றார் .பிறகு அவரை மெடிக்கல் செக்கப் செய்ய வேண்டும் என்று கூறி அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கூட்டி சென்றார் .
இந்த ஊழியர் கடத்தல் பற்றி தகவலறிந்த சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தை (டிஜிசிஏ) சேர்ந்த சில அதிகாரிகள் தங்களின் சக ஊழியரை மீட்க போலீசின் உதவியை நாடினார்கள் .பின்னர் போலீசார் சதுர்வேதி வந்த கார் நம்பரை கொண்டு அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆராய்ந்தார்கள் .அப்போது அவர்களின் ஊழியர் ஒரு மருத்துவமனையில் இருப்பதை கண்டறிந்து அவரை மீட்டார்கள் .இந்த கடத்தல் வேலையில் ஈடுபட்ட சதுர்வேதியும் மற்றும் டாக்ஸி டிரைவரும் கைது செய்யப்பட்டார்கள் .

“ஏரோபிளேன்ல ஏண்டா ஒண்ணுக்கு போக விடமாட்றிங்க..” -கோபமான பயணி செஞ்ச வேலை .