ஆவினில் தொடரும் கொள்முதல் சாதனை முறைகேடு! – பால்முகவர்கள் சங்கம் வெளியிட்ட புள்ளிவிவரம்

 

ஆவின் பால் கொள்முதலில் சாதனை நடந்துவிட்டது என்று ஒரே சாதனையை திரும்பத் திரும்பக் கூறி தங்களுக்குத் தாங்களே கிரீடம் சூட்டிக்கொள்ளும் நிகழ்வு நடந்து வருகிறது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் ஆதாரங்களுடன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சென்னையில் 13 லட்சம் லிட்டரும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 12.03 லட்சம் லிட்டரும் என ஆக மொத்தம் தமிழகத்தில் நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து “ஆவின் நிறுவனம் வரலாற்று சாதனை” படைத்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

ஆவினில் தொடரும் கொள்முதல் சாதனை முறைகேடு! – பால்முகவர்கள் சங்கம் வெளியிட்ட புள்ளிவிவரம்ஏனெனில் மேற்கண்ட விற்பனை இலக்கான நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் என்பதைக் கடந்த மே மாதம் 8ம் தேதியே எட்டியதாக ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐஏஎஸ் ஊடகங்கள் வாயிலாக அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தார். அதிலும் அந்த அறிக்கையில் நாளொன்றுக்கு 24லட்சம் லிட்டரில் இருந்து 25லட்சம் லிட்டராக விற்பனை அதிகரித்து மிகப்பெரிய சாதனை படைத்ததாக தெரிவித்திருந்தார். மேலும் இதே ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் அவர்கள் கடந்த மார்ச் 5ம் தேதி நாளொன்றுக்கு சென்னையில் 12.95லட்சம் லிட்டரும், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 11.37 லட்சம் லிட்டரும் ஆவின் பால் விற்பனையாகி 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரிய சாதனை படைத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆவினில் தொடரும் கொள்முதல் சாதனை முறைகேடு! – பால்முகவர்கள் சங்கம் வெளியிட்ட புள்ளிவிவரம்ஆவின் நிறுவனத்தில் மே மாதம் எட்டப்பட்ட விற்பனை இலக்கு சாதனையை மீண்டும் தற்போது (ஜூலை மாதம்) நிகழ்ந்திருப்பதாக கூறுவது ஆவின் நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதையும், அதன் மூலம் மிகப்பெரிய அளவில் தவறுகள் நடைபெறுவதையும் அறிய முடிகிறது. மேலும் கடந்த மார்ச் மாத விற்பனை அளவில் சுட்டிக் காட்டிய அளவை விட ஜூலை மாதமான தற்போது சொற்ப அளவில் மட்டுமே விற்பனை அளவு அதிகரித்திருக்கும் வகையில் வித்தியாசம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதிலும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியதாக அறிவிக்க கடந்த 30ம் தேதியன்று பால் முகவர்கள் அனைவரும் தங்களின் தினசரி கொள்முதல் அளவை விட அதிக அளவில் ஆவின் பாலினை கொள்முதல் செய்ய வேண்டும் என மொத்த விநியோகஸ்தர்களால் நிர்பந்திக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆவினில் தொடரும் கொள்முதல் சாதனை முறைகேடு! – பால்முகவர்கள் சங்கம் வெளியிட்ட புள்ளிவிவரம்ஆவின் பால் என்றாலே தரமான பால் என்கிற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் வேளையில் ஆவின் நிர்வாகம் பால் விற்பனையில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தந்து தமிழக அரசையும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களையும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. அது போலவே பால் கொள்முதலில் காமராஜ் ஐஏஎஸ் ஆவின் நிர்வாக இயக்குநராக இருந்த போது கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 35.53லட்சம் லிட்டர் கொள்முதல் செய்து சாதனை படைத்ததாக அறிவித்தார். அதன் பிறகு அப்பொறுப்பிற்கு வந்த வள்ளலார் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 35லட்சம் லிட்டர் கொள்முதல் செய்து சாதனை என தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் அதற்கு முந்தைய சாதனையை விட 53ஆயிரம் லிட்டர் குறைவான கொள்முதலையே தனது சாதனையாக அவர் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

ஆவினில் தொடரும் கொள்முதல் சாதனை முறைகேடு! – பால்முகவர்கள் சங்கம் வெளியிட்ட புள்ளிவிவரம்இப்படி ஏற்கனவே நடைபெற்ற விற்பனையையும், கொள்முதலையும் புதிதாக நடத்தி சாதனை படைத்ததாக சித்தரித்து வரும் ஆவின் நிர்வாகத்தை கண்டிக்க வேண்டிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதுவுமே நடக்காதது போல் இருக்கிறார். அப்படியானால் மேற்கண்ட “சாதனை முறைகேடுகள்” அவருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இது வரை ஆவின் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலும், பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பிலும் இருந்தவர்கள் ஆவின் நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் உண்மையாக நடந்து கொள்ளாமல் தங்களின் சுயநலத்திற்காகவே செயல்பட்டு வந்துள்ளது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
எனவே ஆவின் நிர்வாகம் இனியாவது வெளிப்படைத்தன்மையோடும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் எனவும், ஆவின் நிறுவனத்தை உண்மையான அக்கறையோடு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் எனவும், போலியான சாதனைகளை தூக்கி எறியுமாறும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.