சென்னை மக்களுக்கு ஓர் இன்பமான செய்தி.. குறைந்தது கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்!

 

சென்னை மக்களுக்கு ஓர் இன்பமான செய்தி.. குறைந்தது கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,700ஐ எட்டியுள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இதனால் சென்னையில் பெருந்தொற்றாக மாறிய கொரோனா வைரஸ், 8000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரவியுள்ளது. குறிப்பாக சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகரில் அதிக அளவு கொரோனா பாதித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா அதிகமாக பரவி வரும் 33 பகுதிகளை தேர்ந்தெடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

சென்னை மக்களுக்கு ஓர் இன்பமான செய்தி.. குறைந்தது கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்!

இந்நிலையில் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. தற்போது, சென்னையில் 758 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ராயபுரத்தில் 130 பகுதிகளும் , திரு.வி.க நகரில் 124 பகுதிகளும், தேனாம்பேட்டையில் 80 பகுதிகளும் அம்பத்தூரில் 77 இடங்களும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.