ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழி இல்லை! தஞ்சையில் அனைத்து தப்பாட்ட கலைஞர்களின் ஆலோசனை கூட்டம்

ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழி இல்லை! தஞ்சையில் அனைத்து தப்பாட்ட கலைஞர்களின் ஆலோசனை கூட்டம்

தப்பாட்டகலைஞர்கள் எந்த வித கலை நிகழ்ச்சிகளும் இல்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல் தவித்து வரும் நிலையில் அரசு இவர்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற இவர்களது தப்பாட்ட நிகழ்ச்சிகளை மீண்டும் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சையில் நடைபெற்ற அனைத்து தப்பாட்ட கலைஞர்களின் ஆலோசனை கூட்டம் வாயிலாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழி இல்லை! தஞ்சையில் அனைத்து தப்பாட்ட கலைஞர்களின் ஆலோசனை கூட்டம்

இது குறித்து தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற முனைவர் சோமசுந்தரம் ,
கடந்த 5 மாதங்களூக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் எந்தவித நிகழ்ச்சியும் இன்றி மிகவும் தவித்து வரும் நிலையில் தமிழக அரசு அந்த

ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழி இல்லை! தஞ்சையில் அனைத்து தப்பாட்ட கலைஞர்களின் ஆலோசனை கூட்டம்

கலைஞர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றும் இந்த கலைஞர்கள் படிப்பறிவு இல்லாததினால் 80 சதவீதம் பேர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேராததால் அரசு அறிவித்த இரண்டாயிரம் ரூபாய்

அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்த சோமசுந்தரம் அந்த இரண்டாயிரம் ரூபாய் அவர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்தார்
முன்னதாக தப்பாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.