அயோத்தி ராமர்கோவில் கட்டப்படுவதால் நாட்டின் பிரச்னைகள் தீரும்! – பாபா ராம்தேவ் மகிழ்ச்சி

அயோத்தி ராமர்கோவில் கட்டப்படுவதால் நாட்டின் பிரச்னைகள் தீரும்! – பாபா ராம்தேவ் மகிழ்ச்சி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதால் இந்தியாவில் உள்ள பிரச்னைகள் தீரும் என்றும் புதிய கலாச்சாரத்தை உருவாக்கும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர்கோவில் கட்டப்படுவதால் நாட்டின் பிரச்னைகள் தீரும்! – பாபா ராம்தேவ் மகிழ்ச்சி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளன. பிரதமர் மோடி இதை தொடங்கிவைத்துள்ளார். இந்த விழாவில் பாபா ராம்தேவ் உள்ளிட்ட முக்கியமான நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
விழாவில் பங்கேற்ற பாபா ராம்தேவ் கூறுகையில், “ராமர் கோவில் பூமி பூஜையை பார்க்க வாய்த்திருப்பது நமக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

அயோத்தி ராமர்கோவில் கட்டப்படுவதால் நாட்டின் பிரச்னைகள் தீரும்! – பாபா ராம்தேவ் மகிழ்ச்சி

நாட்டில் ராமராஜ்யம் நிறுவ பதஞ்சலி யோக பீடம் அயோத்தியில் குருகுலம் ஒன்றை தொடங்கும். இதில் உலகம் முழுவதும் இருந்து வருபவர்களுக்கு வேதம், ஆயுர்வேதம் கற்றுத் தரப்படும்.
ராமர் கோவில் கட்டுவதன் மூலம் நாட்டில் கலாச்சாரம், நிதியியல், அரசியல் விவகாரத்தில் ஆக்கிரமிப்புகள் முடியும். புதிய கலாச்சாரத்தை இந்த கோவில் உருவாக்கும். இந்து தர்மத்துக்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார்” என்றார்.