சூடு பிடிக்கும் கடித விவகாரம்….. குலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் காங்கிரஸ்காரர்கள்

 

சூடு பிடிக்கும் கடித விவகாரம்….. குலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் காங்கிரஸ்காரர்கள்

சோனியா காந்திக்கு மூத்த தலைவர்கள் கடிதம் எழுதிய விவகாரத்தில் தற்போது குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ்காரர்கள் குறிவைத்து தாக்கி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் அவசியம் என்பதை வலியுறுத்தி ஜிடின் பிரசாதா, கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் உள்பட அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இது அந்த கட்சிக்குள் பெரிய பிரளயத்தை உருவாக்கியுள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் மூத்த தலைவர்களுக்கு எதிராக கொதித்து எழுந்தனர். ஜிடின் பிரசாதாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற காங்கிரஸ் தொண்டர்கள் தற்போது குலாம் நபி ஆசாத்தை குறிவைத்து தாக்க தொடங்கியுள்ளனர்.

சூடு பிடிக்கும் கடித விவகாரம்….. குலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் காங்கிரஸ்காரர்கள்
குலாம் நபி ஆசாத்

உத்தர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் நிர்மல் காத்ரி, குலாம் நபி ஆசாத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நிர்மல் காத்ரி சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது: காங்கிரஸை அழித்த உத்தர பிரதேசத்தின் பொறுப்பாளராக ஆசாத் தனது பங்கினை மறந்து விட்டார். 1996ல் பகுஜன் சமாஜ் கட்சியுடான காங்கிரஸ் கூட்டணி செயல்பட தவறிவிட்டது. அவர் (குலாம் நபி ஆசாத்) 2017ல் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸை சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி சேர வைத்தார். அந்த தேர்தலில் மிகக் குறைந்த அளவாக 7 இடங்களை காங்கிரஸ் வென்றது.

சூடு பிடிக்கும் கடித விவகாரம்….. குலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் காங்கிரஸ்காரர்கள்
நிர்மல் காத்ரி

எனக்கு தெரிந்தவரை, ராகுல் காந்தியும் கூட்டணியை எதிர்த்தார். ஆனால் ஆசாத்தின் மறுபரிசீலனை மற்றும் தோல்வியுற்ற அரசியல் சிந்தனை காரணமாக அமைதியாக இருந்தார். ஆசாத்தின் அரசியல் அறிவியலின் கொள்கைகள் கூட்டணியின் அரசியலில் கவனம் செலுத்தியது. கடந்த 23 ஆண்டுகளாக காங்கிரஸ் காரிய கமிட்டியில் எந்தவொரு தேர்தலும் நடைபெறவில்லை என்று கூறும் ஆசாத் இவ்வளவு காலமாக இந்த பிரச்சினையை ஏன் எழுப்பவில்லை. உள்விவகாரங்களை பொது இடத்தில் பேச கூடாது என காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானித்தது. ஆசாத்தின் நேர்காணல் (செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியது) தீர்மானத்தின் உணர்வை மீறுவதாகும் என தெரிவித்து இருந்தார்.