காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் இவை தான்.. கொடுக்குமா திமுக?

 

காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் இவை தான்.. கொடுக்குமா திமுக?

திமுக கூட்டணியில் இருக்கும் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதியாகிவிட்டது, காங்கிரசுக்கு 25, விசிகவுக்கு 6, மதிமுகவுக்கு 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சிக்கு 6, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6, முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனித நேய மக்கள் கட்சிக்கு 2 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இன்னும் த.வா.கவுக்கும், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கும் தொகுதி பங்கீடு நிறைவு பெறாத நிலையில், இன்றுக்குள் அந்த பணியும் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் இவை தான்.. கொடுக்குமா திமுக?

எஞ்சியிருக்கும் 2 கட்சிகளுக்கும் சேர்த்தே 3 தொகுதிகள் தான் கொடுக்க திட்டமிட்டிருக்கிறதாம். அதை வைத்து பார்க்கையில், மொத்தமாக 177 இடங்களில் திமுக தனது வேட்பாளர்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் வழங்கப்பட உள்ளன? எந்தெந்த தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது என்பது குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளதாம்.

காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் இவை தான்.. கொடுக்குமா திமுக?

இந்த நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீபெரும்புதூர், நாங்குநேரி, கிள்ளியூர், தாராபுரம், முசிறி, ஆத்தூர், மொடக்குறிச்சி, தொண்டாமுத்தூர், காரைக்கால், பட்டுக் கோட்டை உள்ளிட்ட 25 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட திமுகவிடம் விருப்பம் தெரிவித்துள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளை பெற்ற காங்கிரஸுக்கு, இந்த முறை 25 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. தொகுதி பங்கீட்டில் அதிருப்தி இருந்தாலும், திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் தொடருகிறது. 25 தொகுதிகளுக்கு இறங்கி வந்த காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை திமுக கொடுக்குமா? என்பது நாளை தெரிய வந்து விடும்.