சோனியா காந்தி மீது எப்.ஐ.ஆர்…… எதிர்கட்சியின் குரல் நிறுத்தப்பட்டால் ஜனநாயம் இறந்து விடும்…. பொங்கும் காங்கிரஸ்…

சோனியா காந்தி மீது எப்.ஐ.ஆர்…… எதிர்கட்சியின் குரல் நிறுத்தப்பட்டால் ஜனநாயம் இறந்து விடும்…. பொங்கும் காங்கிரஸ்…

பி.எம். கேர்ஸ் தொடர்பாக ஆதராமற்ற குற்றச்சாட்டை பரப்புவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது கர்நாடக போலீஸ் எப்.ஐ.ஆர். பதிவு செய்தற்கு அந்த கட்சி கடும் கண்டம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்கட்சியின் குரல் நிறுத்தப்பட்டால் ஜனநாயம் இறந்து விடும் எனவும் காங்கிரஸ் எச்சரிக்கை செய்துள்ளது.

சோனியா காந்தி மீது எப்.ஐ.ஆர்…… எதிர்கட்சியின் குரல் நிறுத்தப்பட்டால் ஜனநாயம் இறந்து விடும்…. பொங்கும் காங்கிரஸ்…

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் சாகரா நகர காவல்நிலையத்தில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் அந்த கட்சி தொண்டர்கள் மீது பிரவீன் கே.வி. என்பவர் புகார் கொடுத்தார். அந்த புகாரில் கோவிட்-19 தொற்றுநோய் போன்ற பேரழிவுகளை எதிர்த்து போராட இந்தியாவுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட பி.எம். கேர்ஸ் நிதியம் தொடர்பாக, கடந்த மே 11ம் தேதியன்று காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் ஆதாரமுற்ற குற்றச்சாட்டுக்களை தெரிவித்தது. இதன் மூலம் மக்களிடையே அவமதிப்பு மதிப்பு மற்றும் அவநம்பிக்கையை உருவாக்கவும் முயற்சி செய்கிறது.

சோனியா காந்தி மீது எப்.ஐ.ஆர்…… எதிர்கட்சியின் குரல் நிறுத்தப்பட்டால் ஜனநாயம் இறந்து விடும்…. பொங்கும் காங்கிரஸ்…

எனவே காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் கணக்கை கையாளுவதற்கு பொறுப்பு உடைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சி தொண்டர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதனையடுத்து போலீசார் சோனியா காந்திக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சோனியா காந்தி மீது எப்.ஐ.ஆர்…… எதிர்கட்சியின் குரல் நிறுத்தப்பட்டால் ஜனநாயம் இறந்து விடும்…. பொங்கும் காங்கிரஸ்…

மேலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எழுதிய கடிதத்தில், சோனியா காந்தி மீதான எப்.ஐ.ஆரை திரும்ப பெறக்கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக காங்கிரஸ் செய்திதொடர்பாளர் சுபாஸ் அகர்வால் சோனியா காந்தி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்தற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், அரசை கேள்வி கேட்பது எதிர்க்கட்சியின் பங்கு மற்றும் பொறுப்பு. எதிர்கட்சியின் குரல் நிறுத்தப்பட்டால் ஜனநாயம் இறந்து விடும் என தெரிவித்தார்.