காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் கூட எரிபொருள் மீதான வரியை உயர்த்தி உள்ளன… சோனியாவுக்கு தர்மேந்திர பிரதான் பதிலடி

 

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் கூட எரிபொருள் மீதான வரியை உயர்த்தி உள்ளன… சோனியாவுக்கு தர்மேந்திர பிரதான் பதிலடி

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடமிருந்து பணத்தை பறிக்கிறது என காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி குற்றச்சாட்டி இருந்தார். அதற்கு பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: சோனியா காந்தி அண்மையில் மத்திய அரசு கஜானாவை நிரப்புவதாக கூறியிருந்தார். காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் புதுச்சேரியில் கூட எரிபொருள் (பெட்ரோல்,டீசல்) மீதான வரியை ரூ.5 உயர்த்தியதை சோனியா காந்தி அநேகமாக மறந்து இருப்பார். வளர்ச்சி மற்றும் சுகாதாரத்துக்கு வளம் (நிதி) தேவைப்படும்போது அதனை (வரி உயர்த்தல்) அரசு செய்கிறது. மத்திய அரசு இந்த வழிமுறைகளில் திரட்டி மாநில அரசுகளுக்கு அனுப்புகிறது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் கூட எரிபொருள் மீதான வரியை உயர்த்தி உள்ளன… சோனியாவுக்கு தர்மேந்திர பிரதான் பதிலடி

பி.எம். கரிப் கல்யான் திட்டம் தொடங்கப்பட்டது, தேவையான மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டது, விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டது. எரிபொருள் வாயிலாக திரட்டப்பட்ட பணம் எந்த கஜானாவை நிரப்ப பயன்படுத்தப்படவில்லை. மோடிஜியின் திட்டங்களில் எந்தவொரு கஜானாவையும் நிரப்புதல் இல்லை ஆனால் நிதியை விநியோகித்தல் உள்ளது. கடந்த 20ம் தேதி வரையிலான கடந்த 3 மாதங்களில் 42 கோடி பேருக்கு இடைதரகர்களின் குறுக்கீடு இல்லாமல் மொத்தம் ரூ.65,454 கோடி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் கூட எரிபொருள் மீதான வரியை உயர்த்தி உள்ளன… சோனியாவுக்கு தர்மேந்திர பிரதான் பதிலடி

மோடி ஏழைகளின் வங்கி கணக்கில் நேரடி பலனை பரிமாற்றம் செய்தார். ஆனால் நீங்கள் (சோனியா காந்தி) ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் உள்ள உங்க மருமகன் கணக்கில் அதனை அனுப்பினீர்கள். உங்களது கலாச்சாரம் பணத்தை கொள்ளையடிப்பது, ஏழைகள், தேவைப்படுவோர் மற்றும் நடுத்தர வர்த்தகத்தினருக்கு அதனை வழங்குவது மோடிஜியின் திட்டம். கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் எரிபொருள் தேவை 80 சதவீதம் வரை குறைந்து விட்டது. அது பொருளாதாரத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. யாரும் விலையை கணிக்க முடியாது. சர்வதேச சந்தையில் விலை நிலையாக இருந்தால் இந்தியாவிலும் விலை நிலையாக இருக்கும் என மதிப்பிடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.