மீண்டும் காங்கிரசில் அதிரடி மாற்றங்கள்…. பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவதற்காக காத்திருக்கும் சோனியா காந்தி…

மீண்டும் காங்கிரசில் அதிரடி மாற்றங்கள்…. பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவதற்காக காத்திருக்கும் சோனியா காந்தி…

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு, காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஒரு மறுசீரமைப்பை சோனியா காந்தி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். 2019 ஆகஸ்ட் முதல் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியில் சீர்த்திருத்தங்கள் செய்யக்கோரி அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீண்டும் காங்கிரசில் அதிரடி மாற்றங்கள்…. பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவதற்காக காத்திருக்கும் சோனியா காந்தி…
ராகுல் காந்தி

இதன் எதிரொலியாக, கடந்த செப்டம்பரில் காங்கிரஸ் கட்சியில் அதிகாரமிக்க அமைப்பான காரிய கமிட்டியில் சோனியா காந்தி அதிரடி மாற்றங்கள் மேற்கொண்டார். காங்கிரஸ் பொது செயலாளர்கள் பதவியிலிருந்து பிரபலமான தலைவர்களை நீக்கினார். இந்த சூழ்நிலையில் பீகார் தேர்தல் முடிவடைந்தபிறகு மீண்டும் கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை சோனியா காந்தி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் காங்கிரசில் அதிரடி மாற்றங்கள்…. பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவதற்காக காத்திருக்கும் சோனியா காந்தி…
சோனியா காந்தி

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பெயர் வெளியிட விரும்பாத தலைவர் ஒருவர் கூறுகையில், பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு கட்சியில் அனைத்து முக்கியமான தொடர்பு துறை உள்பட கட்சியின் அனைத்து பிரிவுகளிலும் புதிய முகங்களை அறிமுகம் செய்ய சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். மேலும் 2 மாநில பொறுப்பாளர்கள் பதவி காலியாக உள்ளது. டெல்லி மற்றும் கோவாவுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படலாம் என தெரிவித்தார்.