பாஜகவை பின்னுக்கு தள்ளும் காங்கிரஸ்… 13 தொகுதிகளில் முன்னிலை!

 

பாஜகவை பின்னுக்கு தள்ளும் காங்கிரஸ்… 13 தொகுதிகளில் முன்னிலை!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரத்தின் படி 136 தொகுதிகளில் திமுகவும் 98 தொகுதிகளில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது. ஒரு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் முன்னிலையில் உள்ளது. அமமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை.

பாஜகவை பின்னுக்கு தள்ளும் காங்கிரஸ்… 13 தொகுதிகளில் முன்னிலை!

இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவினாலும் அதிமுக – திமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. அதிமுகவின் முக்கிய புள்ளிகள் பலர் வாக்கு எண்ணிக்கையில் பின்னடவை சந்தித்திருப்பது அக்கட்சியின் தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், பெஞ்ஜமின், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் துணை முதல்வர் ஓபிஎஸ்சும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

பாஜகவை பின்னுக்கு தள்ளும் காங்கிரஸ்… 13 தொகுதிகளில் முன்னிலை!

இவ்வாறு அதிமுகவை வீழ்த்தி திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில் 13 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவுக்கும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கும் இடையே 14 தொகுதிகளில் நேரடி போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.