பிரியங்கா காந்தியை வீட்டை காலி செய்ய சொன்ன விவகாரம்… பா.ஜ.க.வை வரிந்து கட்டி தாக்கும் காங்கிரஸ் தலைகள்

பிரியங்கா காந்தியை வீட்டை காலி செய்ய சொன்ன விவகாரம்… பா.ஜ.க.வை வரிந்து கட்டி தாக்கும் காங்கிரஸ் தலைகள்

மத்திய அரசு கடந்த 1997 பிப்ரவரி மாதம் சோனியா காந்திக்கு டெல்லி லுடியென்ஸ் பகுதியில் உள்ள கதவு எண் 35 வீட்டை ஒதுக்கியது. அந்த வீட்டில் தற்போது சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அரசு பங்களாவிலிருந்து வெளியேறும்படி பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அதற்கு மேல் தங்கியிருந்தால் வாடகை வசூலிக்கப்படும் என்றும், இவ்வளவு தங்கியிதற்கு வாடகையாக ரூ.3.46 லட்சம் செலுத்தும்படியும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டு இருந்தது.

பிரியங்கா காந்தியை வீட்டை காலி செய்ய சொன்ன விவகாரம்… பா.ஜ.க.வை வரிந்து கட்டி தாக்கும் காங்கிரஸ் தலைகள்

பிரியங்கா காந்தியை வீட்டை விட்டு வெளியேற சொன்னதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் குதிக்க தொடங்கியுள்ளனர். பல காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், பா.ஜ.க. கட்சியின் முன்னுரிமை பட்டியல். லடாக்கில் மூலோபாய பகுதிகளை ஆக்கிரமித்த மற்றும் இந்திய வீரர்களை கொடுரமாக கொன்ற சீன ஊடுருவகாரர்களை வெளியேற்றவதற்கு முன்பு, பிரியங்கா காந்தியை அவரது பங்களாவிலிருந்து வெளியேற்றுவது ரொம்ப முக்கியம் என பதிவு செய்து இருந்தார்.

பிரியங்கா காந்தியை வீட்டை காலி செய்ய சொன்ன விவகாரம்… பா.ஜ.க.வை வரிந்து கட்டி தாக்கும் காங்கிரஸ் தலைகள்

காங்கிரஸ் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான கேப்டன் அமரீந்தர் சிங் கூறுகையில், காந்தி குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அவருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு மீண்டும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்க வேண்டும் மற்றும் அவர் தங்கியிருக்கும் பங்காளவை மீட்டெடுக்க வேண்டும். தனிநபரின் முழுமையான பாதுகாப்பு மற்றம் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசியல் பரசீலனைகள் மற்றும் வேறுபாடுகள் வர அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக அந்த நபர் பயங்கரவாத தாக்குதல்களால் இரண்டு உறுப்பினர்களை இழந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கும் போது என தெரிவித்தார்.