மதரஸா பள்ளிகளுக்கு நிதி கிடையாது என்றால், கும்ப மேளாவுக்கு ரூ.4,200 கோடி செலவிட்டதும் தவறு… உதித் ராஜ்

மதரஸா பள்ளிகளுக்கு நிதி கிடையாது என்றால், கும்ப மேளாவுக்கு ரூ.4,200 கோடி செலவிட்டதும் தவறு… உதித் ராஜ்

அரசு பணத்தில் மத கல்வியை அனுமதி முடியாது என்றால், உத்தர பிரதேச அரசு கும்ப மேளாவுக்கு ரூ.4,200 கோடி செலவிட்டதும் தவறு என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உதித் ராஜ் தெரிவித்தார்.

அசாமில் அரசு பணத்தில் மத கல்வியை அனுமதிக்க முடியாது ஆகையால் அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்களையும், சமஸ்கிருத பள்ளிகளையும் மூட உள்ளதாக அம்மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். இந்த விவகாரம் அந்த மாநிலத்தை தாண்டி உத்தர பிரதேசத்திலும் ஒலிக்க தொடங்கியுள்ளது.

மதரஸா பள்ளிகளுக்கு நிதி கிடையாது என்றால், கும்ப மேளாவுக்கு ரூ.4,200 கோடி செலவிட்டதும் தவறு… உதித் ராஜ்
உதித் ராஜ்

காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் தனது டிவிட்டரில், எந்தவொரு மத கல்விகள் மற்றும் சடங்குகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு சொல்கிறது, அரசுக்கு சொந்த மதம் கிடையாது என்பதால், கும்பமேளாவை ஏற்பாடு செய்ய உத்தர பிரதேச அரசு ரூ.4,200 கோடி செலவு செலவிட்டது தவறு என பதிவு செய்து இருந்தார். ஆனால் அந்த டிவிட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதனை நீக்கி விட்டார்.

மதரஸா பள்ளிகளுக்கு நிதி கிடையாது என்றால், கும்ப மேளாவுக்கு ரூ.4,200 கோடி செலவிட்டதும் தவறு… உதித் ராஜ்
அனுராக் தாகூர்

உதித் ராஜின் கருத்துக்கு மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையைில், சிலருக்கு அபிவிருத்திக்கான யோசனைகளும், விருப்பமும் இல்லை. கோடிக்கணக்கான மக்கள் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளும்போது, அரசாங்கம் உள்கட்டமைப்பை உருவாக்கி வசதிகளை வழங்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன என தெரிவித்தார். உத்தர பிரதேச அமைச்சர் பிரிஜேஷ் பதக் கூறுகையைில், மில்லியன் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இது போன்ற நிகழ்வு குறித்து யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என தெரிவித்தார்.