உ.பி. முதல்வரால் மடத்தைதான் நடத்த முடியும்.. மாநிலத்தை அல்ல.. யோகியை தாக்கிய காங்கிரஸ் முன்னாள் எம்.பி..

உ.பி. முதல்வரால் மடத்தைதான் நடத்த முடியும்.. மாநிலத்தை அல்ல.. யோகியை தாக்கிய காங்கிரஸ் முன்னாள் எம்.பி..

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை குறிப்பிட்டு அனைத்து கட்சியினரும் யோகி ஆதித்யநாத் அரசை கடுமையாக சாடி வருகின்றனர்.

உ.பி. முதல்வரால் மடத்தைதான் நடத்த முடியும்.. மாநிலத்தை அல்ல.. யோகியை தாக்கிய காங்கிரஸ் முன்னாள் எம்.பி..
உதித் ராஜ்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதித் ராஜ், ஹத்ராஸ் சம்பவம் மற்றும் தலித்துக்களுக்கு எதிரான தொடரும் கொடுமைகள் தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: யோகி ஆதித்யநாத்தால் ஒரு மடத்தை நடத்த முடியும்.. மாநிலத்தை அல்ல.

உ.பி. முதல்வரால் மடத்தைதான் நடத்த முடியும்.. மாநிலத்தை அல்ல.. யோகியை தாக்கிய காங்கிரஸ் முன்னாள் எம்.பி..
பிரதமர் மோடி

யோகி ஆதித்யநாத் அரசியலுக்கு நுழைவதற்கு முன் ஒரு சாதுவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்ற நடவடிக்கைகள் நிகழ்கின்றன. ஏன் அவை நடக்குகின்றன? தலித்துகள் மீது மட்டுமே அட்டூழியங்கள் நடக்கின்றன? யோகி ஆதித்யநாத்தை முதல்வர் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன். அது அவர்களுக்கு சொந்தமானது அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.