சி.பி.எஸ்.இ. பாடம் விவகாரம்… மதசார்பின்மை கொள்கைகளில் பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை.. சித்தராமையா தாக்கு

சி.பி.எஸ்.இ. பாடம் விவகாரம்… மதசார்பின்மை கொள்கைகளில் பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை.. சித்தராமையா தாக்கு

இந்த கல்வியாண்டில் மாணவர்களின் சுமையை குறைக்கும் நோக்கில், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களில் 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என மத்திய அரச அறிவித்தது. இதனை தொடர்ந்து சி.பி.எஸ்.இ. பாடதிட்டங்களில் மதசார்பின்மை, குடியுரிமை, கூட்டாட்சி தொடர்பான பாடத்திட்டங்களை மத்திய அரசு நீக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்க்கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

சி.பி.எஸ்.இ. பாடம் விவகாரம்… மதசார்பின்மை கொள்கைகளில் பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை.. சித்தராமையா தாக்கு

அந்த வரிசையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான சித்தராமையாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். ஒரு டிவிட்டில், குடியுரிமை, மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி பற்றிய அத்தியாங்களை கைவிடுவதற்கான மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் முடிவை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இது இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான தூண்களை புரிந்து கொள்வதிலிருந்து ஒரு தலைமுறை மாணவர்களை இழக்கும். கல்வியில் காவிப்படுத்துவதை நிறுத்து என பதிவு செய்துள்ளார்.

சி.பி.எஸ்.இ. பாடம் விவகாரம்… மதசார்பின்மை கொள்கைகளில் பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை.. சித்தராமையா தாக்கு

மற்றொரு டிவிட்டில், 11ம் வகுப்பு அரசியல் அறிவியில் பாடத்திட்டத்தில் குடியுரிமை, மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி பற்றிய பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. இது ஏதாவது விளக்குகிறதா? ஆம்.பா.ஜ.க.4 இந்தியா இந்த கொள்கைகளை நம்பவில்லை மற்றும் அதன் கடந்த கால நடத்தையை உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு பதிவு செய்து இருந்தார்.